பாப்பரசரின் இலங்கை தூதுவர் ஸ்ரீ சம்போதி விகாரைக்கு விஜயம்

புனித பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையின் இலங்கை தூதுவர் பேராயர் Pierrenguyenven Tot கொழும்பு 7ல் அமைந்துள்ள ஸ்ரீ சம்போதி விகாரைக்கு விஜயம் செய்தார்.

விகாராதிபதி சங்கைக்குரிய தரணாகம குசலதம்ம தேரரை சந்தித்ததுடன் புனித பொருட்களுக்கு மலர் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டு நல்லாசியினை பெற்றுக்கொண்டார்.

இதன்போது மத நல்லிணக்கத்திற்காக பௌத்த அலைவரிசை இலங்கையில் மேற்கொண்டுவரும் பணிகுறித்தும் பேராயர் மகிழ்ச்சி தெரிவித்தார்.