பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலை தூள், இறக்குமதிசெய்யப்படும் பாக்கு, இலத்திரனில் சிகரெட் ஆகியவற்றை தடைசெய்வதற்கு நாடாளுமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
இவற்றைவிற்பனை செய்தால் 2 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமுன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புகையிலை மற்றும் மதுசார மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
சிகரெட் பெட்டிகளில் 80வீத எச்சரிக்கைப்புகைப்படம் கொண்டுவரப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 பகுதிகளில் பெயரை மட்டுமே குறிக்கும் வகையில் ஏற்பாடு இடம்பெறும். அத்துடன், தனி சிகரெட் விற்பனைக்கு தடைவிதிக்கப்படும். அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் உள்ள பகுதியின் 500 மீற்றர் வரையான தூரத்தில் சிகரெட் விற்பனை செய்வதற்கும் மதுபானம் விற்பதற்கும் தடை விதிக்கப்படும்’ என்றும் அவர் கூறினார். இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் பட்டியலிட்டுக்காட்டிப்பேசினார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]