பான் கீ மூன் – அநுர திஸாநாயக்க பேச்சு

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன், நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்கவுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள யொன்ஸி பல்கலைக்கழகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உலக பசுமை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டத்திற்கு அமைய நிலைபேறான அபிவிருத்திக்கான இலங்கையின் கடப்பாடுகள் குறித்து இதன்போது, கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]