பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு விசேட வேலைத்திட்டம்

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு பல தரப்பினரை உள்ளடக்கி புதிய வேலைதிட்டமொன்றை உருவாக்கவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பொலிஸார், பிரதேச செயலாளர் காரியாலயம், தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் உருவாக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மிரிஸ்ஸ மற்றும் மிதிகம பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மீது கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் காரணமாக, இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]