பாதுகாப்பு தரப்பினரின் பாவணையிலிருந்த கட்டடம் சுமார் 27 வருடங்களின் பின்னர் உரிமையாளரிடம் மீளக்ககையளிப்பு

பாதுகாப்பு தரப்பினரின் பாவணையிலிருந்த கட்டடம் சுமார் 27 வருடங்களின் பின்னர் உரிமையாளரிடம் மீளக்ககையளிப்பு

பாதுகாப்பு தரப்பினரின்

மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேசத்தில் பாதுகாப்பு தரப்பினரின் பாவனையிலிருந்த கட்டடம் சுமார் 27 வருடங்களின் பின்னர் இன்று 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை உரிமையாளரிடம் மீளகையளிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டத்தை மீளக்கையளிக்க உதவிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அத்துடன் ஒத்துழைப்பு வழங்கிய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மயிலம்பாவெளி- கருணாலயம் சுவாமி ராமதாஸ் நிறுவனத்தின் முகாமையாளர் ராஜதுரை முருகதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இக்கட்டத்தை 1990 ஆம் ஆண்டுமுதல் இராணுவத்தினரும் அதையடுத்து 2009 ஆம் ஆண்டுமுதல் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் பயன்படுத்திவந்தனர்.

இந்நிலையில் போர் முடிவுற்ற பின்னர் தர்ம செயற்பாடுகளுக்காக சுவாமி ராமதாஸ் நிறுவனம் இக்கட்டத்தை மீள வழங்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்ததுடன் கவனயீர்ப்பு பிரார்த்தனையிலும் ஈடுபட்டது.

இறுதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து தமது கோரிக்கையினை முன்வைத்ததையடுத்து கட்டடத்தை மீளக்கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்பு தரப்பினரின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]