பாதுகாப்பு கெடுபிடிகளால் ஆதரவாளர்கள் முகம்சுழிப்பு

ஆதரவாளர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார கூட்டங்களில் சிறப்பு அதிரடிப்படையினரின் பிரசன்னமும், பொலிஸாரின் பாதுகாப்புக் கெடுபிடிகளும், பொதுமக்கள் மற்றும் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டங்கள் சிறப்பு அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் வடக்கில் இடம்பெற்று வருகின்றன.

நேற்றுமுன்தினம் புதுக்குடியிருப்பில் நடந்த கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்துக்குச் சென்ற அனைவரும், பொலிஸாரால் கடுமையாக சோதனையிடப்பட்டுள்ளனர்.

பிரசார கூட்டங்களில் முக்கிய பேச்சாளர்களாக இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் உரையாற்றி வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டங்களில் சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]