பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு அவசியம்

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதும் அவசியம் என, பாகிஸ்தான் பிரதமர் சஹிட் கான் அப்பாசி (Shahid Khaqan Abbasi)தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை இரண்டு நாடுகளும் விரும்புவதாகவும், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு திருப்தியளிக்கிறது என்றும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பாதுகாப்புத் துறையில் பாகிஸ்தானுடன் மேலும் உறவுகளைப் பலப்படுத்துவதில் இலங்கை ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]