பாதிக்கப்பட்ட வீடுகளிற்கு முதற்கட்டமாக 10,000 ரூபா!

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 13 ஆயிரத்து 646 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 157 ஆகும். இவற்றில் 6 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. 52 நலன்புரி நிலையங்களில் 2 ஆயிரத்து 661 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 539 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக ஆரம்ப கட்ட நிதியுதவியாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 24 மணித்தியாலமும் செயற்படும் தொலைபேசியின் ஊடாக அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான தொலைபேசி இலக்கம் 117 ஆகும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கண்டிக்கு அருகில் மெத-அல வடக்குப் பகுதியில் மழைய காரணமாக சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளரின் கண்காணிப்பின் கீழ் சமைத்த உணவு வழங்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]