பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு

மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறை விரைவில்
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதாகவும், கடந்த வருடத்துடன்; ஒப்பிடுகையில் இம்முறை பாதிப்புக்கள் குறைவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கடந்த வருடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, காலி மாவட்டத்திற்கு 80 கோடி ரூபாயும், களுத்துறை மாவட்டத்திற்கு 100 கோடி ரூபாயும் ஒத்துக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்திற்கு 150 கோடி ரூபாயும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு 200 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனர்த்த நிலை தொடர்பில் பற்றி பொதுமக்கள் தொலைபேசி ஊடாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு அறிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

1902 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொண்டு தகவல்களை தெரிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமது வீட்டுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது தொடர்பில் கிராம உத்தியோகத்தர் அல்லது அப்;பிரதேசத்தைச் சேர்ந்த கள உத்தியோகத்தர்களுக்கோ அறியத் தரலாம் என, அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]