பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடரும் கடற்படையின் மனிதாபிமான சேவைகள்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்படும் மனிதாபிமான நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.


பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கை, பாதுகாப்பு இடங்களில் அவர்களை அழைத்துச் செல்லல், தேவையான உணவு வகைகளை விநியோகித்தல், வைத்திய முகாம்களை நடத்துதல் போன்ற அனைத்து பணிகளுக்கும் கடற்படை உதவி வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனைகள் இதற்கு கிடைத்துள்ளன.


வெள்ளம், மண்சரிவு அனர்த்தம் தணிந்துள்ள போதிலும் நிவாரண சேவைகள் அனைத்துப் பிரதேசங்களிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடற்படை மற்றும் அபிவிருத்திப் பிரிவு, பாதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி, பதுரெலிய, பத்தேகம ஆகிய பிரதேசங்களிலுள்ள பொதுமக்களுக்காக நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூன்றின் மூலமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 5 ஆயிரம் லீற்றர் நீர் சுத்திகரித்து விநியோகிக்க முடியும்.பாதிக்கப்பட்ட மக்களுக்காக
மாத்தறை, காலி, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் 276 கிணறுகளை சுத்தம் செய்வதற்கு கடற்படையினரால் முடிந்துள்ளது.

நிவாரணம் வழங்குவதற்காக இலங்கைக்கு வந்த இந்தியா, பாகிஸ்தான் கடற்படை வைத்திய குழுவினருடன் இணைந்து கடற்படையின் வைத்திய குழுவும் மாத்தறை, உடுகம, கலபாத்த, புளத்சிங்கள, நாகொட மற்றும் எல்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வைத்திய சிகிச்சை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது சுமார் 2 ஆயிரம் பேர் வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர். பாதிக்கப்பட்ட 9571 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடிந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]