பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கும் பொறிமுறையை நிறுத்த எதிரணி முயற்சி

வெளிநாட்டு நீதிபதிகள் என்ற வார்த்தையை வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை வழங்கும் பொறிமுறையை நிறுத்த எதிரணியினர் முயற்சி செய்கின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

சர்வதேச நீதிபதிகள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது ஒரு தகவல்தான். ஆனால், இதனைப் புடித்துக்கொண்டு தேர்தலின் போது, யுத்த வீரர்களை மின்சார கதிரைக்கு அனுப்ப போகிறார்கள். தண்டனை வழங்கப்போகிறார்கள் என்று கூச்சலிட்டிருந்தனர்.

குற்றமிழைத்த அரசியல், சிவில் மற்றும் இராணுவத்தில் உள்ள சிலர்தான் இவர்களின் இந்த அரசியல் நடவடிக்கையை முன்னோக்கிக் கொண்டுசெல்கின்றனர். இதனால் அரசுக்கு பாரிய பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளது. அரசு என்ற ரீதியில் சாதாரத்துவத்திற்கா அல்லது அசாதாரணத்துவத்திற்கு முகங்கொடுப்பது என்று தீர்மானிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவருவதா இல்லை என்பது தொடர்பிலும் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு அரசிடமே உள்ளது.

விசாரணைப் பொறிமுறைத் தொடர்பில் தீர்மானிக்க கூச்சலிடும் புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. நல்லிணக்கச் செயலணி நாடு பூராகவும் சென்று மக்களின் கருத்துகளை அறிந்துதான் தமது அறிக்கையை முன்வைத்துள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்தான். எனவே, அவர்களின் கோரிக்கையே இங்கு பிரதானமாக கருதப்பட வேண்டியது. கடந்த காலங்களில் இலங்கையின் நீதித்துறை சுயாதீனத்துவத்துடன் இயங்கவில்லை. அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டமையால் நீதித்துறையின் சுயாதீனத்துவம் தொடர்பில் மக்கள் நம்பக்தன்மையை இழந்திருந்தனர்.

முன்னாள் அரசுடன் இயங்கிச் செயற்படாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டன. அதன் காரணமானமாகத்தான் இந்த நாட்டில் வெளிநாட்டு நீதிபதிகள் நீதிப்பொறிமுறையில் உள்வாங்கப்பட வேண்டும் என்று அழுத்தம் எழுந்தது. அதன் காரணமாகே உள்ளகப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்பட்டால் நம்பக்கத்தன்மையாக அமையும் என்று நல்லிணக்கச் செயலணி வலியுறுத்தியது. இது சாதாரணமாகக் கருத்தாகும்.

ஆனால், இதனை பாரிய பிரசாரமாக எதிரணியினர் முன்னெடுத்துச் செல்கின்றனர். தமிழ் மக்களுக்குச் சார்பாக அரசு நடந்துகொள்கிறது. விடுதலைப் புலிகளை மீள உருவாக்கப்பார்கிறார்கள் என்று பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிடுகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]