‘பாதாள குழு’க்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

பாதாள குழு

அண்மைக்காலமாக அதிகரித்துவரும் ‘பாதாள குழு’வின் நடவடிக்கையை ஒழிப்பதற்காக இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

பாதாள உலகக்குழுக்கள் தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகும் பிரதேசங்களை சுற்றி இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்காக, கடுமையான சோதனை செய்யும் நடவடிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், மனித கொலையுடன் தொடர்புடையவர்களை தேடி சோதனை நடவடிக்கை அதிகரிப்படும் என்றும், அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகள் சிறந்த பலனை கொடுப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]