பாதாள குழுக்களின் நடவடிக்கைகளை நாம் கட்டுப்படுத்தினோம்: மஹிந்த

பாதாள உலகக் குழுவினரின் நடவக்கைகளை தமது ஆட்சிக் காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை பகுதியில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “துப்பாக்கிச் சூடுகளின் மூலம் கொலை செய்யப்படுகின்றனமை தொடர்பான செய்திகளே ஊடகங்கள் வாயிலாக தற்போது கேட்க முடிகின்றது. கடந்த இரண்டு, மூன்று தினங்களில் கொழும்பில் மாத்திரம் இது போன்ற ஆறு கொலைகள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறான நிலை நாட்டில் ஏன் ஏற்படுகின்றது? இவற்றுக்கு யார் மீது குற்றம் சுமத்துவது என்றும், இவற்றை யாரால் நிறுத்த முடியும் என்று தமக்குத் தெரியவில்லை” என்றார்.

மேலும், பாதாள உலகக் குழுவினரை கட்டுப்படுத்தி, போதைப் பொருளில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கவும் தமது ஆட்சியில் முடிந்திருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]