பாதாள உலக குழு உறுப்பினரான பெரல் சங்க கைது

பாதாள உலக குழு உறுப்பினரான பெரல் சங்க கைது

பாதாள உலக குழு உறுப்பினரான பெரல் சங்க எனப்படும் ஹேரத் முதியன்சலாக பிரபாத் மதுஷங்க கைது

ஹெரோயின் விற்பனை, கப்பம் உள்ளிட்ட பலதரப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழுவைச் சேர்ந்த பெரல் சங்க என அழைக்கப்படும் ஹேரத் முதியன்சலாக பிரபாத் மதுஷங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறையின் விஷேட அதிரடிப்படையினர் நேற்றிரவு பேலியகொட பகுதியினைச் சுற்றிவளைத்தனர். பேலியகொட பகுதியில் பதுங்கியிருந்த பெரல் சங்க கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 6 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]