பாதசாரி கடவையில் அம்புலன்ஸ் மோதி குடும்பஸ்தர் பலி

அம்புலன்ஸ்

பாதசாரி கடவையில் அம்புலன்ஸ் மோதி குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு திருமலை நெடுஞ்சாலையில் கொம்மாதுறைப் பிரசேத்தில் பாதசாரி கடவையில் அம்புலன்ஸ் வண்டியில் சிக்குண்டு குடும்பஸ்தரொருவர் உயிரழந்துள்ளார்.

கொம்மாதுறை பிரதான வீதியில் சனிக்கிழமை (13) மாலை இடம்பெற்றச் விபத்தில் கொம்மாதுறை திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த எஸ்.சிவப்பிரகாசம் (63) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சந்திவெளி பிரதேச வைத்தியசாலையிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நோயாளரைக் ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி கொம்மாதுறை பிரதான வீதியில் உள்ள பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட குறித்த நபரை மோதியுள்ளது. இச்சம்பத்தில் விபத்து இடம்பெற்ற ஸ்தலத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]