வீதி ஒழுங்கு விதிமுறைகளுக்கு மீறியதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை, வாகனம் ஒன்றில் போக்குவரத்துப் பொலிஸார் ஏற்றிச் சென்ற சம்பவம் ஒன்று நேற்றய தினம் நடைபெற்றுள்ளது.அந்தவகையில் பாதசாரிகள் நடைபாதைகளை பயன்படுத்த முடியாத வகையில் தரித்து விடப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களை வாகனம் ஒன்றின் ஊடாக பொலிஸார் ஏற்றிச்சென்றுள்ளனர் என தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவைகளில் வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிடவும் வர்த்தக நிலையங்களுக்கு செல்வோரும் தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு செல்வதால் குறித்த பகுதியில் போக்குவரத்து மிக பாதிக்கப்படுவது வழமை.
அத்துடன் அவ்வாறு கடவைகளில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதன் காரணமாக பாதசாரிகள் வீதிகளில் இறங்கி பயணிப்பதால் வாகனங்களில் செல்வோர் பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வந்த நிலையில் நேற்றய தினம் குறித்த நடவடிக்கை பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.(15)
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com