முகப்பு Sports பாண்டியாவை வறுத்தெடுக்கும் ஹர்பஜன்

பாண்டியாவை வறுத்தெடுக்கும் ஹர்பஜன்

முதல் டெஸ்டில் பந்துவீசிய பாண்டியா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. பேட்டிங்கிலும் 22, 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாவது டெஸ்டில் 3 விக்கெட் எடுத்து 31,11 என குறைவான ரன்கள் எடுத்து ஆல்-ரவுண்டராக சோபிக்காமல் சொதப்பிய பாண்டியா 4 இன்னிங்ஸிலும் மொத்தமாகவே 90 ரன்களும் 3 விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்துள்ளார்.

இதையடுத்து அவரை கடுமையாக விமர்சித்துள்ள இந்திய வீரர் ஹர்பஜன் சிங், அவருக்கு ஆல்-ரவுண்டர் என்ற பட்டம் தேவையில்லை எனக் கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

பாண்டியா மீது அணியின் கேப்டனான கோலிக்கு நம்பிக்கையே இல்லை. பேட்டிங்கில் அதிக ரன்கள் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் சரியாக பந்து வீசாமல் போனால் அவருக்கும் மட்டுமின்றி அணியின் நிலமையும் மோசமாகி விடும்.

முதலில் ஆல்-ரவுண்டர் என்ற பட்டத்தை நீக்க வேண்டும். ஆல்-ரவுண்டர் என்றால், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், குர்ரன், வோக்ஸ் போல அணிக்கு சிறப்பாக பங்காற்ற வேண்டும். அத்தகைய செயல்பாட்டைத் தான் பாண்டியாவிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பர். ஒரே நாளில் அவர் ஒன்றும் கபில்தேவ் ஆகிவிட முடியாது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com