பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!!

” களத்தூர் கண்ணம்மா” படத்தில் குழந்தை நட்சத்திர கமல் வாயசைத்த “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ….” பாடலை பாடிய பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்!

” களத்தூர் கண்ணம்மா” படத்தில் , நடிகர் கமல் குழந்தை நட்சத்திரமாக வாயசைத்த “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ….” பாடலையும் , அதற்கு முன்பாக “பராசக்தி ” படத்தில் “ஓ… ரசிக்கும் சீமானே … ” , “செங்கமலத்தீவு” படத்தில் , “பேசியது நான் அல்ல … ” , “குமுதம்” படத்தில் “மியாவ் மியாவ் பூனை குட்டி … ” மற்றும் , “பாப்பா பாடும் பாட்டு ….”, “நாயகன் ” படத்தில் “”நான் சிரித்தால் தீபாவளி …” உள்ளிட்ட மிகவும் பிரசித்தி பெற்ற , நூற்றுக்கணக்கான பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி (வயது .85) கடந்த சில மாதங்களாக கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் உடல் நலம் குன்றி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் , சிகிச்சை பலனின்றி ,இன்று மதியம் 1.30 மணி சுமாருக்கு அவர் இயற்கை எய்தினார்.

எம்.எஸ்.ராஜேஸ்வரியின் இறுதி சடங்கு நாளை 26 – 4 – 2018 அன்று மாலை 4.30 மணி சுமாருக்கு சென்னை – 44 , குரோம்பேட்டை ,சி-103 எம்.ஜி.ஆர். தெரு , சோழாவரம் நகர் பகுதியில் உள்ள அவரது மூத்த மகளது இல்லத்தில் இருந்து புறப்பட்டு , குரோம்பேட்டை மயானத்தில் நடைபெற உள்ளது.

எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு வெங்கடேசன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகள் ஆர்த்தியும் இளம் பின்னணி பாடகியாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்து ., இதே நாளில் அகால மரணம் அடைந்த துக்கமும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]