பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞர்களுக்கு நடந்த விபரீதம்!!

மாத்தறை, மொரவக்க பிரதேசத்தில் 15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக மூன்று இளைஞர்களை இன்று கைது செய்துள்ளதாக மொரவக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மாணவியை 5 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தந்தையை இழந்த இந்த பாடசாலை மாணவி பல முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து மாணவி தனது தாயாருடன் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மொரவக்க நகரில் மின்சார பொருட்களை விற்பனை செய்யும் கடையில் தொழில் புரியும் ஒருவரும், முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும், வாகன திருத்தகம் ஒன்றில் தொழில் புரியும் ஒருவரும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நாளைய தினம் மொரவக்க நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். இந்த குற்றச் செயலில் ஈடுபட உதவிய மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]