பாடசாலை மாணவர்கள் மீதான துஸ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்

பாடசாலை மாணவர்கள் மீதான துஸ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்

பாடசாலை மாணவர்கள்

யாழ்ப்பாணம்; வடக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற பாடசாலை மாணவர்கள் மீதான துஸ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்று வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு வேலியே பயிரை மேய்வது போன்று பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களினால் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற துஸ்பிரயோகங்களுக்கு இவ்வாறான கடுமையான தண்டனைகளை வழங்குவதுடன் அவர்களைப் பகிரங்கப்படுத்தி சேவையிலிருந்தும் நீக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண சபையின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கல்வி அமைச்சு மீதான விவாதம் நேற்று இடம்பெற்றது. அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வட மாகாணத்தில் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவற்றில் சில சம்பவங்கள் வெளிவந்தாலும் பல சம்பவங்கள் வெளியெ வராமலேயே மறைக்கப்படுகின்றன. இதற்குப் பல காரணங்களும் இருக்கின்றன.

இதிலும் குறிப்பாக பாடசாலைகளில் ஆசரியர்களால் மேற்கொள்ளப்படுகின்ற சம்பவங்கள் எமது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறான மிகக் கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அதிபர்,ஆசிரியர், உயர் அதிகாரிகள் என்று பாராது அனைவருக்கும் எதிராக கடுமையானதொரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

குறிப்பாக அண்மையில் ஓமந்தையில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவர் மீது துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் இதே போன்று பல தடவைகள் துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டு இடமாற்றங்களே வழங்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறானவர்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதாக இல்லை என்றெ நான் கூறுகின்றென்.

ஏனெனில் கடந்த காலங்களில் அதாவது புலிகள் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. ஆதற்கு அவர்களது தண்டனைகளே காரணமாகவும் இருக்கின்றன. ஆனால் தற்பொது அவ்வாறான தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. அதனால் குற்றவாளிகள் தப்பித்துச் சென்று மீண்டும் அதே குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

ஆகவே இவ்வாறான குற்றச் செயல்கள் எமத சமூகத்திற்கு கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு சேவைகளிலிருந்தும் நீக்க வேண்டும் என்றார்.

இந்தப் பாதிப்புக்கள் நகர்ப்புறங்களில் குறைவாக இருந்தாலும் கிராமங்களிலேயெ அதிகம் இடம்பெறுகின்றன. அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பாதுகாக்கின்ற நிலையும் உள்ளதால் அமைச்சர் இவற்றைக் கவனத்தில் எடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

இதன் போது எழுந்த சிவாஜிலிங்கம் இவ்வாறு சின்னஞ்சிறு பிள்ளைகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தும் எவராயினும் அவர்களுக்கு வீரியத்தன்மையை இல்லாது செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]