பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது

பாடசாலை மாணவர்களை

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது இந்த விடயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். பாடசாலை செல்கின்ற பிள்ளையை பாடசாலை செல்லாது நிறுத்துவதற்கு பெற்றோருக்கு உரிமை இல்லை என கிழக்கு மாகாண ஆளுநர் சட்டத்தரணி ரோஹித போகல்லாகம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள எவரும் இனம், மதம் மற்றும் மொழி சார்ந்து நடாத்தப்படமாட்டார் ஒவ்வொருவரும் சம உரிமையுடன் நடத்தப்படுவார் என்றும் அவர் கூறினார்.

பாடசாலை மாணவர்களை

யின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரி முதல்வர் குமாரசாமி அருணாசலம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – கிழக்கு மாகாணத்தில் நவம்பர் மாத நடுப்பகுதியில் 1500 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று பாடங்களின் அடிப்படையில் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும்.

பாடசாலை மாணவர்களை

கல்வித்துறையில் கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்திலேயே உள்ளது. மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கிழக்கு மாகாணத்தின் கல்வியை முன்னேற்றுவதற்காக சகல வசதிகளையும் எற்படுத்த நாங்கள் தயாராகவுள்ளளோம். அம்முறை சாதாரண தரப் பரீட்சையில் அதிகமான மாணவர்கள் சித்தி பெற வேண்டும்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்னு சிறிய காலம் உள்ளதான் காரணமாக கிழக்கு மாகாணத்தில் எந்த வொரு ஆசிரியர் இடமாற்றங்களும் இந்த ஆண்டு நடைபெறாது இது தொடர்பாக செயலாளர்களுக்கு நான் அறிவுறுத்தல் விடுத்துள்ளளேன்.

பாடசாலை மாணவர்களை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கஷ்டப பிரதேசத்திலுள்ள பாடசாலை ஆசிரியர்கள் பலர் மன உளச்சலின் மத்தியில் பணியாற்றுகிறார்கள். அவ்வாறன ஆசிரியர்கள் வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் ஊடக எனக்கு தெரியப்படுத்துங்கள்.

மாணவர்களை போரட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு பெற்றோர் இடமளிக்க கூடாது. அவ்வாறு இடமளிக்கும் போது அவர்களது கல்வியில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த விடயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.

பாடசாலை மாணவர்களை

செங்கலடி மத்திய கல்லூரி நூற்று ஐம்பது ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பதின்படி இந்த பாடசாலைக்குத் தேவையான சகல வளங்களையும் வழங்கி இலங்கையில் சகல வளங்களும் உள்ள பாடசாலையாக மாற்றுவதற்காக நடவடிக்கையெடுக்கப்படும்.

பாடசாலையின் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கான உபகரணங்கள் 2018 ஆண்டு வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் கல்குடா கல்வி வலயத்தின் தேவைகள் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர் சமர்ப்பிக்கும் போது செங்கலடி மத்திய கல்லூரியின் தேவைகள் தொடர்பாகவும் குறிப்பிட வேண்டும்” என்றார்.

பாடசாலை மாணவர்களை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]