பாடசாலை மாணவர்களுக்கு புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு காப்புறுதி

சிறுவர் காப்புறுதி ஊடாக புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட சகல நோய்களுக்கும் காப்புறுதி இழப்பீடு வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த காப்புறுதி ஊடாக பாடசாலை மாணவர்களும் நன்மைகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி அட்டை வழங்கும் நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காப்புறுதி தொடர்பிலான தகவல்களை 011 2 357 357 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிந்துகொள்ள முடியும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]