பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை

லிந்துலை பெயார்வில் தோட்டத்தை சேர்ந்த 7 வயது பாடசாலை மாணவன், தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்

தலவாகலை தமிழ் மகா வித்தியலயத்தில் தரம் 7 கல்வி பயிலும் 12 வயதுடைய டி சதீஸ்வரன் என்ற மாணவரே இன்று காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

நேற்று இரவு குறித்த சிறுவனின் பெற்றோர் திட்டிய நிலையில், இன்று காலை பாடசாலை சீருடையணிந்தவாறு அறையின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் நுவரெலியா மாவட்ட நீதவானின் விசாரணையை அடுத்து, மரண பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக லிந்துல்லை பொலிஸார் தெரிவித்தனர்.