பாடசாலை நேரத்தில் அரசியல்வாதிகள் பாடசாலைக்கு வர முடியாது

“ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணிவரை அரசியல்வாதிகள் எவரும், செல்ல முடியாது. நானும் மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கு செல்ல மாட்டேன்” என, மாகாண தமிழ் கல்வியமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

ஊவா மாகாண தமிழ்ப் பாடசாலைகளில் பின்பற்றக்கூடிய ஐந்து முக்கிய விடயங்களை, மாகாண தமிழ்ப் பாடசாலைகளில் நேற்றைய தினத்திலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய செந்தில் தொண்டமான், “ ஊவா மாகாண தமிழ்ப் பாடசாலைகளில் அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெக்க வேண்டுமென்றால் பிற்பகல் 1.30 மணிக்குப் பிறகு பாடசாலைகளுக்கு சென்று, அவற்றினை நிறைவேற்றலாம். அது குறித்து மாகாண கல்விச் செயலாளரிடம் முன் அனுமதி பெற்றே, மேற்குறிப்பிட்ட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]