பாடசாலைகளுக்கு குடிநீர் வினியோகம்

யூ.எஸ்.எயிட்டின் நிதி உதவியைக் கொண்டு பாம் பவுண்டேசனுக்கூடாக பாடசாலை மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டதின் மூலம் மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ இராம கிருஷ்ண வித்தியாலயத்திற்கான குழாய் குடிநீர் வினியோகம் இன்று (26) செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.குடிநீர் வினியோகம்

குடிநீர் வினியோகம்

குடிநீர் வினியோகம்

யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிக்குழுத் தலைவர் கலாநிதி அன்ரூவ் சிஸன் பாம் பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் சுனில் தொம்பேபொல, திட்ட முகாமையாளர் அருள் சக்தி, ஏறாவூர்ப்பற்று பதில் பிரதேச செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன், செங்கலடி மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி ஷாபிறா வஸீம்; கல்குடா கல்வி வலயப் பணிப்பாளர் கே. ரவி பிரதிப் பணிப்பாளர் திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

யூ.எஸ்.எயிட்டின் நிதி உதவியைக் கொண்டு பாம் பவுண்டேசனுக்கூடாக 2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 2762 குடும்பங்களுக்கு நன்மைய பயக்கக் கூடியதாக நீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. 420 மலசலகூடங்கள்

முற்றும் 40 கிணறுகள் அமைக்கப்பட்டும் மேலும் 1600 கிணறுகள் புனரமைக்கப்பட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்த் தேவையுள்ள 5 பிரதேசங்களில் பாடசாலைகள் மற்றும் உள்ளுர் சமூகங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான எமது பணியில் இதுவரை இதுவரை 45 பாடசாலைகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களும், 5 ஆயிரம் குடிமனைகளுக்கு நீர் இணைப்புக்களை வழங்குவதன் மூலம் 20 ஆயிரம் பேரும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ள வழியேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]