பாடசாலைகளின் எல்லைகளுக்குள் சிகரெட் விற்பனை செய்ய தடை!!

நாட்டிலுள்ள பாடசாலைகளின் எல்லைகளுக்குள் 100 மீற்றர் தூரத்திற்குள் சிகரெட் விற்பனை செய்யப்படுவதனை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பானது, அண்மையில் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது, உலக சுகாதார தினமான ஏப்ரல் 7ம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுமாத்திரமின்றி 18 வயதிற்கு உட்பட்டோருக்கு மட்டும் சிகரெட்டை விற்பனை செய்வதை தடை செய்வதற்கான உத்தரவு 21 வயதாக அதிகரிப்பதற்கும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]