முகப்பு News Local News பாடகி பிரியானி ஜயசிங்க கொலை ; கணவன் கைது

பாடகி பிரியானி ஜயசிங்க கொலை ; கணவன் கைது

பிரபல சிங்கள பாடகி பிரியானி ஜயசிங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் அவரது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாடகி பிரியானி ஜயசிங்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அவருடைய பாணந்துறையில் உள்ள வீட்டில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஜோடி கத்தரிக்கோலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த கொலையுடன், அவரது கணவனுக்கு தொடர்புள்ளதாக பொலிஸார் நேற்று சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், கொலைச் சம்பவத்தை அடுத்து பிரியானி ஜயசிங்கவின் கணவன் தலைமறைவாகியிருந்தார்.

அதனையடுத்து, சந்தேக நபராக கணவரை கைது செய்யவதற்காக நடவடிக்கைகளை பாணந்துறை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com