மாத்தறை வைத்தியசாலையில் பாடகி ஜின்ஜர்

பாடகி ஜின்ஜர்

பாடகி ஜின்ஜர் பிரபல சிங்கள பாடகி ஜின்ஜரின் கார் விபத்துக்குள்ளாகியதையடுத்து, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெனியாயவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 60 அடி பள்ளத்தில் குறித்த கார் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான காரில் ஜின்ஜரின் 7 வயது மகன் உள்ளிட்ட நால்வர் பயணித்த நிலையில், அனைவரும் காயமடைந்துள்ளதாகவும் அதனையடுத்து, தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாடகி ஜின்ஜர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]