பாகிஸ்தான் ராணுவம் தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதாக அபிநந்தன் பகிரங்க கருத்து வெளியீடு

பாகிஸ்தான் ராணுவம் தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதாக விங் கமாண்டர் அபிநந்தன் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் இன்று தெரிவித்துள்ளார்.

எல்லை கட்டுப்பாட்டை மீறி பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன் 70 மணி நேரங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அரசால் விடுதலை செய்யப்பட்டார்.

அவரை நேற்று லாகூரில் இருந்து சாலை மார்க்கமக அட்டாரி- வாகா எல்லையில் பாகிஸ்தான் வெளியுறவு துறை அதிகாரிகள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.

அதன் பிறகு டெல்லி அழைத்து செல்லப்பட்ட அபிநந்தன் ராணுவ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல் பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

விமானப்படை அதிகாரிகள், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட பலரும் மருத்துவமனை சென்று அபிநந்தனை உடல் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் ’’பாகிஸ்தான் ராணுவம் தன்னை உடல்ரீதியாக துன்புறுத்தவில்லை. மனரீதியிலான துன்புறுத்தப்பட்டேன் என கூறியுள்ளார்’’

இதேவேளை நேற்றைய தினம் பேசிய அபிநந்தன்…

“நான் எனது இலக்கை நோக்கி போக முயன்ற போது பாகிஸ்தான் விமான படை விமானியால் எனது விமானம் தாக்கப்பட்டது. எனது விமானம் தாக்குதலுக்கு உள்ளாகி விழுந்தது. நான் அதிலிருந்து தப்பி ஓட முயன்ற போது சிலர் கோபத்தோடு என்னை நெருங்கினார்கள். ஆனால் இரு அதிகாரிகள் வந்து என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றினார்கள். அதன்பின் முதலுதவிகளை செய்து என்னை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றார்கள். அவர்கள் எனக்கு எவ்வித துன்புறுத்தலையும் செய்யவில்லை. அவர்கள் மகாத்மாக்கள் போல என்னைக் கவனித்து உதவினார்கள். நான் அது குறித்து மகிழ்கிறேன். இதுவே உண்மை. மீடியாக்கள் சொல்வது எல்லாம் உண்மை இல்லை. அவர்கள் உண்மைகளை திரித்து வெளியிடுகிறார்கள்.” என்று கூறியிருந்தார்.

பாகிஸ்தான்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]