முகப்பு Sports பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு போட்டிகளில் விளையாட தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு போட்டிகளில் விளையாட தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது தடை விதித்துள்ளது.

இதன்படி துடுப்பாட்ட வீரரான நசீர் ஜாம்ஷெட்டுக்கு, 10 ஆண்டு காலம் தடையும், ஷர்ஜில் கான் மற்றும் காலித் லத்தீப் ஆகியோருக்கு 5 ஆண்டு காலம் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையானது, பாகிஸ்தான் சூப்பர் லீக் ரி-ருவென்ரி தொடரில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாலேயே விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

மேலும் ஜாம்ஷெட் மீதான சூதாட்ட புகார்கள் உண்மையானவை என தெரியவந்துள்ளதாகவும், எனவே, எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அவருக்கு 10 ஆண்டு காலம் தடை விதிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இதில் தொடர்புடைய ஷர்ஜில் கான் மற்றும் காலித் லத்தீப் ஆகியோருக்கு 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது என கிரிக்கெட் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் நசீர் ஜாம்ஷெட் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது சூதாட்ட புகாரில் சிக்கியதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வந்த நிலையில் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com