பாகிஸ்தான் – அவுஸ்ரேலிய அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு

பாகிஸ்தான் – அவுஸ்ரேலிய அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலிய ஆகிய அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

டுபாயில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 10 விக்கெட்களை இழந்து 482 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி, 202 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் 208 ஓட்டங்கள் முன்னிலையில், பதிலுக்கு 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பின்னர் 461 ஓட்டங்களை பெற்றால் வெற்றி இன்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 5 ஆம் நாள் நிறைவில் 8 விக்கெட்களை மாத்திரமே இழந்து 362 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை சமநிலை படுத்தியதியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]