பாகிஸ்தான் – அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு… காணொளி உள்ளே..

பாகிஸ்தான் – அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு… காணொளி உள்ளே..

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையே இடம்பெற்று வரும்இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டுபாயில் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானது.

இந்நிலையில் 2 ஆவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணியின் மூன்றாவது வீரராக களம் இறங்கிய அசார் அலி 64 ஓட்டங்களை எடுத்திருந்த போது, அவுஸ்ரேலிய வீரர் பீட்டர் சிடில் வீசிய பந்தை அடித்து விளையாடினார்.

அந்த பந்து எல்லைகோட்டை நோக்கி சென்ற நிலையில், பந்து எல்லையை கடந்து சென்று விடும் என நினைத்த பாகிஸ்தான் வீரர் அசார் அலி, தன் சக வீரருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

ஆனால் பந்து எல்லைகோட்டை தொடாத நிலையில் அவுஸ்ரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் பந்தை கைப்பற்றி விக்கெட் காப்பாளரை நோக்கி வீசினார்.

இதைச்சரியாக பயன்படுத்திக் கொண்ட அவுஸ்ரேலியா விக்கெட் காப்பாளர் டிம் பெயின், அவரை ரன்-அவுட் முறையில் ஆட்டமிழப்பு செய்தார்.

இருப்பினும் அதுக்கூட தெரியாமல் அசார் அலி பேசிக்கொண்டு இருந்த காணொளி தற்போது வைரலாக பரவி வருகின்றது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]