பாகிஸ்தானை வீழ்த்தியது உலக பதினொருவர் அணி

ஹம்லா-திஸர சிறப்பாட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது உலக பதினொருவர் அணி.

உலக பதினொருவர் அணி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது 20க்கு 20 கிரிக்கட் போட்டியில் உலக பதினொருவர் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானின் லாஹுரில் இந்தப் போட்டி நேற்று இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணிக்காக பாபர் அசம் 45 ஓட்டங்களைக அதிகபட்சமா பெற்றுக் கொடுக்க, அஹமட் சேஷாட் 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் திஸர பெரேரா மற்றும் பெட்ரி ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

இதையடுத்து, பதிலளித்தாடிய உலக பதினொருவர் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 175 ஒட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணியின் ஹசீம் அம்லா 55 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்களாக 72 ஓட்டங்களையும், இலங்கை அணியின் திஸர பேரேரா 19 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடங்களாக 47 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று கொடுத்தனர்.

துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசித்த இலங்கை அணி வீரர் திஸர பெரேரா ஆட்டநாயகனாக தெரிவானார்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.

இதற்கமைய, 3 போட்டிகளைக் கொண்ட 20க்கு 20 தொடர், 1 இற்கு 1 என சமநிலையில் உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]