பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்கு தயார்: பிரதமர் மோடி

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானுக்கு இன்று (திங்கட்கிழமை) வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுடன் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அண்டைநாடான பாகிஸ்தானுடன் அமைதிப்பாதையிலான நல்லுறவை இந்தியா விரும்புவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மோடி, தெற்காசிய கண்டத்தை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுவித்தாக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் 22-வது பிரதமராக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கடந்த 17ஆம் திகதி பதவியேற்றார்.

அவரது தலைமையில் 21 மந்திரிகள் அடங்கிய மந்திரிசபை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 16 மந்திரிகள் இன்று பதவி ஏற்றுகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]