பாகிஸ்தானில் 18 இந்திய மீனவர்கள் கைது

பாகிஸ்தானில் 18 இந்திய மீனவர்கள் கைது

பாகிஸ்தானில் 18 இந்திய மீனவர்களை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறியே இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு சொந்தமான 2 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டதாக, அந்நாட்டின் கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]