பாகிஸ்தானில் மனைவியின் பிறப்புறுப்பை சேதப்படுத்திய கொடூர கணவன்!!

பாகிஸ்தானில் மனைவியின் பிறப்புறுப்பை சேதப்படுத்திய கொடூர கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் தேரா காசி கான் பகுதியில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜாமில் அஹமத் என்ற நபர் தமது மகளின் குடியிருப்புக்கு அருகாமையில் நடந்து செல்லும் போது திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த ஜாமில் உடனடியாக தம்முடன் வந்த உறவினர் ஒருவருடன் மகளின் குடியிருப்புக்குள் பாய்ந்து சென்றுள்ளார்.

அங்கே பூட்டிய அறை ஒன்றில் இருந்து அழு குரல் கேட்டுள்ளது. உடனடியாக பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். தமது மகள் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி வலியில் அலறியபடி கிடந்துள்ளார். அவரது அருகே கத்தியுடன் தமது மருமகனையும் கண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பொலிசாருக்கு புகார் அளித்த நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில் தமது மனைவி அவரது தங்க மோதிரத்தை தர மறுத்ததாகவும் அதனாலையே தாம் ஆத்திரத்தில் அவரது பிறப்புறுப்பினை சேதப்படுத்தியதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் இதை ஏற்க மறுத்துள்ளனர். தமது மகள் பிள்ளை பேறு இல்லாமல் இருப்பதாலையே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

தற்போது பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கணவனை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]