முகப்பு News பாகிஸ்தானில் ஆடம்பர கார்கள், ஸ்மார்ட்போன்கள் இறக்குமதிக்கு தடை: இம்ரான்கான் அதிரடி

பாகிஸ்தானில் ஆடம்பர கார்கள், ஸ்மார்ட்போன்கள் இறக்குமதிக்கு தடை: இம்ரான்கான் அதிரடி

பாகிஸ்தானில் ஆடம்பர கார்கள், ஸ்மார்ட்போன்கள் இறக்குமதிக்கு தடை: இம்ரான்கான் அதிரடி

பாகிஸ்தானில் ஆடம்பர கார்கள், ஸ்மார்ட்போன்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தலைமையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி ஆணையத்தின் உதவியை நாடாமல் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அதன்படி ஆடம்பர கார்கள், ஸ்மார்ட் போன்கள், பாலாடைக்கட்டி மற்றும் பழ வகைகளை ஒரு ஆண்டுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

தற்போதுள்ள சூழ்நிலையில் பாகிஸ்தானில் ரூ.66 ஆயிரம் கோடி பற்றாக்குறை உள்ளதாகவும், ஆடம்பர பொருட்கள் இறக்குமதியை தடை செய்வதன் மூலம் ரூ.33 ஆயிரம் கோடி பற்றாக்குறையை சரிகட்ட முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றுள்ள நிலையில் பாகிஸ்தானின் நிதிநிலை குறித்தும் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும் பொருளாதார ஆலோசகர்களின் கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்துக்கு இம்ரான் கான் தலைமை தாங்கிய நிலையில், நிதி மந்திரி ஆசாத் உமர் மற்றும் 15 நிதி ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதால் அதிக அளவில் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது. இதனால் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதார சிக்கல் உருவாகி உள்ளது. அதை சரி செய்ய சர்வதேச நிதி ஆணையத்திடம் இருந்து நிதி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை பிரதமர் இம்ரான்கான் விரும்பாத நிலையில், மேற்படி அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com