பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு

பாகிஸ்தானின் 22வது பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பதவியேற்றுள்ளார்.

இவர் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய அரசியல்வாதியுமாக இருந்து வருகின்ற நிலையில், இஸ்லாமாபாத்திலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மன்மூன் ஹூசைன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்திருந்த இம்ரான் கான், தற்போது முதல் முறையாக அரசின் உயரிய பதவியை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி நடைபெற்றிருந்த நிலையில், மறுதினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, இம்ரான்கானின் கட்சி 116 தொகுதிகளை கைப்பற்றியதோடு, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 64 தொகுதிகளிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

மொத்தம் 342 உறுப்பினர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க 172 உறுப்பினர் பலம் தேவை என்பதால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான்கான ஆட்சி அமைக்க முனைந்தார்.

இதனையடுத்து, ஆட்சியமைப்பதற்கான உரிமை சட்டமூலம் பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியினால் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 176 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]