பாகிஸ்தானின் பந்துவீச்சில் திணறிய மேற்கிந்திய தீவுகள் அணி – 74 ஓட்டங்களால் படுதோல்வி

பாகிஸ்தானின் பந்துவீச்சில் திணறிய மேற்கிந்திய தீவுகள் அணி 74 ஓட்டங்களால் 2ஆவது ஒருநாள் போட்டியில் படுதோல்வியடைந்துள்ளது. இந்த அபார வெற்றியின் மூலம் தொடரை 11 என பாகிஸ்தான் அணி சமப்படுத்தியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று மேற்கிந்தியத் தீவுகளின் கயானாவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில், பாபர் அசாம் அதிரடியான சதத்தை விளாசியிருந்தார். 132 பந்துகளை சந்தித்திருந்த அவர் 7 நான்கு ஓட்டங்கள், மூன்று ஆறு ஓட்டங்கள் அடங்களாக 125 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

ம்மாட் வஸிம் 43 ஓட்டங்களை ஆட்டமிழக்காமலும், மொஹமட் ஆபிஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

283 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி பாக்கிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் திணறியது. மேற்கிந்தியத் தீவுகள் அணியால் சகல விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

துடுப்பாட்டத்தில், அணித் தலைவர் வோல்டர் 68 ஓட்டங்களையும், நுர்ஸ் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், ஹசன் அலி 5 விக்கெட்களை சாய்த்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 11 என சமநிலை பெற்றுள்ள. முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பாக். அணியை 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் கடைசியுமான போட்டி நாளை கயானா புருவெடியன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானின் பந்துவீச்சில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]