பஸ் – வேன் மோதி ஒருவர் படுகாயம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோர்வூட் பகுதியிலிருந்து மஸ்கெலியா நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் மஸ்கெலியாவிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்றும் இன்று காலை 7 மணியளவில் குடாமஸ்கெலியா பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் வேன் சாரதி காயமடைந்து மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]