பஸ் விபத்தில் 37 பேர் காயம்

சிலாபம் – புத்தளம் வீதியில் இன்றுக் காலை இடம்பெற்ற விபத்தில் 37 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த பஸ், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோதி, ஆராய்ச்சிக்கட்டுவ பகுதியில் இன்று காலையில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஊழியர்கள் 37 பேர், சிலாபம் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.