“முன்னுரிமை பஸ் லேன்” மாணவர் போக்குவரத்து வாகனங்களுக்கும்

 பஸ் லேன்
பஸ் லேன்

மாணவர் போக்குவரத்து பஸ் மற்றும் வேன்கள் நாளை ‘முன்னுரிமை பஸ் லேன் ‘ னை பயன்படுத்த முடியும் என மெகாபோலிஸ் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு நகர எல்லைக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட வீதிகளில் செயற்படுத்தப்பட்ட
இத்திட்டம் அமைச்சர் சம்பிகா ரணவக்கவால் முன்னெடுக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், குறிப்பாக கொழும்பு நகரத்திற்குள் இத்திட்டம் அறிமுகப்டுத்தப்பட்டது. பஸ் லேன்

மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் முகாமைத்துவத்தால் வழங்கப்பட்ட ‘தேசிய போக்குவரத்து சுற்றறிக்கை அறிக்கையின்படி’, கொழும்பு நகர எல்லைக்குள் 5,000 பாடசாலை வேன்கள் மற்றும் 1,000 பள்ளி பஸ்களும் இயக்கப்படுகின்றன.

எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இது ஒரு முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.