பஸ் மீது மரமொன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

பஸ் மீது மரமொன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியத்தலாவை – ஹப்புத்தளை வீதியில் கல்கந்தை பகுதியில் இந்த அனர்த்தம், நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொழும்பு – பதுளை வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்தே இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 24 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்றும், பேருந்தும் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]