பஸ் மீது டிப்பர் வாகனம் மோதியதில் பஸ் சாரதி படுகாயம்- ஏறாவூரில் சம்பவம்

நெடுஞ்சாலை ஏறாவூர் நகரில் செவ்வாய்க்கிழமை 19.06.2018 நள்ளிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் கதிர்காம யாத்திரீகர்களுடன் திரும்பிக் கொண்டிருந்த தனியார் மினி பஸ் மீது டிப்பர் வாகனம் மோதியதில் பஸ் சாரதி படுகாயமடைந்ததோடு பஸ்ஸ{ம் சேதமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அன்றைய தினம் நள்ளிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து நிகழ்வு பற்றி மேலும் தெரியவருவதாவது, யாத்திரீகர்களை கதிர்காமத்திற்குச் சென்றிருந்த யாத்திரீகர்களை ஏற்றிக் கொண்டு வந்தாறுமூலை நோக்கி வந்து கொண்டிருந்தபோது

எதிர்த் திசையில் மட்டக்களப்பு நோக்கிச் சென் கொண்டிருந்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மினி பஸ் மீது மோதியுள்ளது.

இதனால் பஸ்ஸின் ஒருபக்க கண்ணாடிகள் அனைத்தும் சேதமடைந்ததோடு பஸ்ஸின் சாரதிக்கு கண்ணாடி துண்டுகள் சிதறி காயங்களை ஏற்படுத்தியது.

டிப்பரைச் செலுத்திச் சென்ற சாரதி போதையுடன் காணப்பட்டதை அவரது தடுமாற்றத்தை வைத்து ஊகிக்கக் கூடியதாக இருந்ததாக யாத்திரீகர்களின் பஸ்ஸில் பயணித்தோரும் விபத்த நடந்தவுடன் உதவிக்கு விரைந்தோரும் அவதானித்ததைத் தெரிவித்தனர்.

பஸ் மீது டிப்பர் பஸ் மீது டிப்பர் பஸ் மீது டிப்பர்

பஸ்ஸில் குழந்தைகள் பெண்கள், வயோதிபர்கள் இருந்தபோதும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

ஏறாவூர் பொலிஸ் போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். டிப்பர் சாரதி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் செலுத்திச் சென்ற டிப்பர் வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]