6.56 சதவீத உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது – நாளை முதல் பஸ் உரிமையாளர்கள் பணி நிறுத்தம்

பஸ் உரிமையாளர்கள் பணி நிறுத்தம்

(Inter-Provincial Private Bus Association ) IPPBA, பஸ் கட்டணம் குறைந்தபட்சம் 15 வீதத்தை உயர்த்துவதற்கு போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஆகிய அமைப்புகளிடம் அதன் தலைவர் சரத் விஜித குமார கோரிக்கை விடுத்துள்ளதாகவும் 20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் 6.56% ஆல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டண தொகையில் அதிகரிப்பு செய்யாதிருப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அனைத்து மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]