முகப்பு News Local News பஸ் சில்லில் சிக்கி முதியவர் படுகாயம்

பஸ் சில்லில் சிக்கி முதியவர் படுகாயம்

தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் முன்புற சில்லில் சிக்கி 60 வயது நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அதனையடுத்து குறித்த நபர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து, பேருந்தின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவை லொய்னோன் பகுதியை சேர்ந்த நபரொருவரே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com