பஸ் குண்டுவெடிப்பு அறிக்கை விரைவில் ஒப்படைப்பு

தியத்தலாவ, கஹகொல்ல பகுதியில் பஸ்ஸில் ஏற்பட்ட கைக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட இராணுவக் குழுவின் அறிக்கை, எதிர்வரும் வாரத்துக்குள் இராணுவத் தளபதியுடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மாகாண தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ருக்மால் டயஸ் தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி தியதலாவ, கஹகொல்ல பகுதியில் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் காயமடைந்திருந்தனர்.