‘பஸ் கட்டண அதிகரிப்பு’க்கு அனுமதி

12.5 சதவீத பஸ் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

தனியார் பஸ் சங்கங்கள் மற்றும் போக்குவரத்து பிரதியமைச்சருக்கிடையே ஏற்பட்ட இணக்கப்பாடு தொடர்பான யோசனையே அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்பட்டது.

போக்குவரத்து பிரதியமைச்சர் அஷோக அபேசிங்ஹ மற்றும் தனியார பஸ் சங்கங்களுக்கிடையே கடந்த 16 ஆம் திகதி கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

இந்தக் கலந்துரையாடலின் போது 12.5சதவீத பஸ் பயணக் கட்டண அதிகரிப்புக்கு இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]