பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது- தனியார் பஸ் சங்கம் அதிரடி தெரிவிப்பு

கடந்த ரணில் ஆட்சி காலத்தில் பல தடவைகள் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு செய்யப்பட்டது. எரிபொருட்களின் விலையை தீர்மானிக்க எரிபொருள் விலை சூத்திரம் ஒன்று பயன்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் விலைகள் அதிகரிக்கப்பட்டு வந்தது.

இதன் காரணமாக பஸ் மற்றும் ஆட்டோ கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டது. இந்த விலை அதிகரிப்புகள் காரணமாக பொதுமக்கள் இன்னல்களை அனுபவித்து வந்தனர்.

பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர் அதிரடியாக எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது.

இதுவரை மஹிந்த அரசு எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 17 ரூபாவால் குறைத்துள்ளது. இதன் அடிப்படையில் பஸ் கட்டணங்களையும் குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இது தொடர்பில் ஆராய்ந்த தனியார் பஸ் சங்கம் பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது என உறுதியாக கூறிவிட்டது.

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டாலும் பஸ்ஸின் ஏனைய உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதாக கூறியுள்ள தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் 100க்கு 3 வீதம் மாத்திரம் குறைக்க முடியும் ஆனாலும் உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதால் பஸ் கட்டணம் 100க்கு 3 வீதம் கூட குறைக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இம்மாதம் 21 ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணையகத்தில் பஸ் கட்டண குறைப்பு தொடர்பில் தீர்மான எடுப்பதற்கான கலைந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]