பஸ்ஸுக்காக ஓடிய போது கல்லில் கால் தடுக்கி விழுந்து பெண் மரணம்

பஸ்ஸுக்காக ஓடிய போது கல்லில் கால் தடுக்கி விழுந்ததில் மயக்கமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மரணித்து விட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை 12.01.2019 இடம்பெற்ற இச்சம்பவத்தில் கதிரவெளி – புதூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் செல்லாச்சி (வயது 63) என்ற 8 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் வெருகல் பகுதியிலுள்ள தனது மரக்கறித் தோட்டத்திலிருந்து கதிரவெளிக்கு வருவதற்காக தயாரானபோது பஸ் வருவதைக் கண்டு பஸ்ஸை நிறுத்தி ஏறிக்கொள்வதற்காக ஓடிச் சென்றுள்ளார்.
அப்போது கால் கல்லில் தடக்கி வீழ்ந்து மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை வாகரை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் ஏற்கெனவே அவர் உயிர் பிரிந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]